பெட்டங்காடி என்பது கால்நடைகளுக்கான ஆன்லைன் சந்தை — பசு, காளை, எருமை. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் என்றே உருவாக்கப்பட்டது.
ஏன் இதைத் தொடங்கினோம்
ஒரு மாட்டை விற்க வேண்டுமென்றால், வண்டியில் ஏற்றி, சந்தைக்குக் கொண்டு போய், முன்பின் தெரியாத தரகர் ஒருவரை நம்ப வேண்டியிருக்கிறது. வாங்க வேண்டுமென்றாலும் அதே பயணம்தான், கையில் பணத்துடன். மூன்று மாவட்டம் தள்ளி இருக்கும் ஒரு நல்ல மாடு, இல்லாததற்குச் சமம்.
கங்கேயத்தில் இருக்கும் ஒரு விவசாயி, கோயம்புத்தூரில் இருக்கும் ஒருவருக்குத் தன் காளையை — இருவரும் வீட்டை விட்டு நகராமல் — காட்ட முடிய வேண்டும். அதற்கிடையில் இருவருடைய பணமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இது.
இங்கே ஒரு வர்த்தகம் எப்படி நடக்கிறது
உங்கள் பணம் தெரியாத ஒருவரிடம் நேரடியாகப் போவதில்லை. பெட்டங்காடி அதை வைத்திருக்கும். மாடு உங்களிடம் வந்து சேர்ந்த பிறகுதான் விற்பவருக்குப் பணம் போகும்.
முடிவு செய்வதற்கு முன்னால், பண்ணை வருகை பதிவு செய்து மாட்டை நேரில் பார்க்கலாம்.
விளம்பரத்தில் சொன்னது போல் மாடு இல்லையென்றால், எங்களுடைய 7 நாள் திரும்பப் பெறும் கொள்கை பொருந்தும்.
மாட்டை விற்பனைக்குப் பதிவு செய்வது இலவசம். ஆவணங்கள் எதுவும் தேவையில்லை — ஒரு கைபேசி எண் போதும்.
எந்த மொழியில்
இங்கே இருக்கும் எல்லாமே — விளம்பரங்கள், பணம் செலுத்தும் திரைகள், வாட்ஸ்அப்பில் நாங்கள் அனுப்பும் செய்திகள் — தமிழிலும் ஆங்கிலத்திலும் வேலை செய்யும். தமிழ் என்பது பின்னால் சேர்க்கப்பட்ட மொழிபெயர்ப்பு அல்ல. இந்தத் தளம் திறக்கும் மொழியே அதுதான்.
நாங்கள் யார்
பெட்டங்காடியை, கோயம்புத்தூரிலிருந்து Tukar Eco Tech Private Limited நடத்துகிறது. நாங்கள் ஒரு சிறிய நிறுவனம்; இப்போதுதான் தொடங்கியிருக்கிறோம். அதில் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது — நீங்கள் எங்களுக்கு எழுதும்போது, அது கால் சென்டருக்குப் போகாது; இதைக் கட்டுபவர்களிடமே நேரடியாக வந்து சேரும்.
எங்களைத் தொடர்பு கொள்ள
6/101, பிரபு நகர், ஜி.என். மில்ஸ் அஞ்சல், கோயம்புத்தூர் - 641029
[email protected]
+91 94877 11110
இந்தத் தளத்தில் ஏதாவது புரியவில்லை என்றாலோ, மெதுவாக இருந்தாலோ, தவறாக இருந்தாலோ — நாங்களே யூகிப்பதைவிட உங்களிடமிருந்து கேட்பதுதான் நல்லது. இது சம்பிரதாயத்துக்குச் சொல்லும் வார்த்தை அல்ல. இங்கே சரியாக வேலை செய்யும் பெரும்பாலானவை, யாராவது ஒருவர் "இது சரியில்லை" என்று சொன்னதால்தான் சரிசெய்யப்பட்டன.